ஜேர்மனியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம்: நிபுணர்கள் எச்சரிக்கை
*விலைவாசி உயர்வு முதலான பொருளாதார பிரச்சினைகள் ஜேர்மனியில் போராட்டங்களுக்கு வழிவகுக்கக்கூடும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
*அத்துடன் போராட்டங்களை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் கருதப்படுகிரது.
பொருளாதார பிரச்சினைகள் காரணமாக ஜேர்மனியில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அதிகரிக்கும் எரிபொருள் விலைவாசி, அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம், எதிர்காலத்தைக் குறித்த சந்தேகம் போன்ற விடயங்கள் மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், இந்த ஆண்டு அவை பெரிய அளவில் போராட்டங்களுக்கு வழிவகுக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள்.
அத்துடன், அந்த சுழ்நிலையை தீவிரவாதிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.