பவுண்டரி செல்ல வேண்டிய பந்தை தாவி பிடித்த ரிஷப் பாண்ட்! அப்படியே மிரண்டு போன இங்கிலாந்து வீரர் வீடியோ
இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பாண்ட் பிடித்த கேட்ச் சமூகவலைத்தளங்களில் பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
அதன் பின் ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல்(86) மற்றும் ரவீந்திர ஜடேஜா(56) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 278 ஓட்டங்கள் எடுத்தது.
இதயடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் ஆடி வரும் இங்கிலாந்து அணி சற்று முன் வரை 4 விக்கெ இழப்பிற்கு 203 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன ஜோ ரூட் 90 ஓட்டங்கள் எடுத்து, சதத்தை நோக்கி விளையாடி வருகிறார்.
Warra catch Pant? @RishabhPant17pic.twitter.com/P0sSU0veFO
— Soham (@Soham718) August 7, 2021
இந்நிலையில் இப்போட்டியில், இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஆன சிப்ளி, பும்ரா வீசிய ஆட்டத்தின் 45.4-வது பந்தை ஆப் திசையில் அடித்து ஆட முற்பட்டார்.
ஆனால், பந்தானது பேட்டின் அடிப்பகுதியில் பட்டு மின்னல் வேகத்தில் கீப்பர் பின்னே சென்றது. இது பவுண்டரி தான் என்று நினைத்த போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் ரிஷப் பாண்ட் அதை தாவி அற்புதமாக பிடித்தார்.
Me, simultaneously cheering at my TV while also trying to figure out how Pant made this catch. #ENGvIND pic.twitter.com/HaZD565lzC
— Ben Baby (@Ben_Baby) August 7, 2021
இதைக் கண்ட இந்திய வீரர்களான ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் அப்படியே ஆச்சரியமடைந்தனர். அதுமட்டுமின்றி சிப்ளி அப்படியே சற்று நிமிடம் இந்த கேட்சை நம்ப முடியாமல் மிரண்டு போய் வெளியேறினார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.