ஒரே இடத்தில் நின்ற ராஜபக்ச மற்றும் தவான்! லட்டு போன்ற ரன் அவுட்டை கோட்டை விட்ட வீரர் வீடியோ
ஐபிஎல் தொடரில் டெல்லி - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரன் ஓடும் போது இரு பேட்ஸ்மேன்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது.
இப்போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் ஒரு கட்டத்தில் பானுகா ராஜபக்சே மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் விளையாடினர்.
அப்போது 4.4வது ஓவரில் தான் ஒரு நகைச்சுவை நிகழ்ந்தது. லலித் யாதவ் வீசிய அந்த பந்தில் தவான் அடிக்க அந்த பந்தை லலித் யாதவ் ஓடி சென்று பிடித்தார்.
ஆனால் அதற்கு தவான் எதிர்முனைக்கு ஓடி வந்தார். தவான் வந்ததை கவனிக்காத ராஜபக்சா பந்து எங்கே சென்றது என்பதை மட்டும் பார்த்தார். அப்போது, தவான் அவுட்டாவது உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.
அந்த சமயத்தில் தான் ஒரு டிவிஸ்ட் நிகழ்ந்தது, லலித் யாதவ் பந்தை தவறாக தூக்கி எறிய அதனை ரிஷப் பண்ட் பிடிக்கவில்லை. இதனை பயன்படுத்தி கொண்டு ராஜபக்சே மறு பக்கம் ஓடி தப்பித்தார்.
இது தொடர்பான வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.