தோனியின் சாதனையை ஓரங்கட்டிய ரிஷப் பண்ட்! இது கெத்து தான்
தோனியின் சாதனையை ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில் தென்னாப்பிரிக்க அணி இதில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் முதல் முறையாக இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ரிஷப் பண்ட் ஏற்றார்.
இது முதல் போட்டி என்பதால் ரிஷப் பண்ட் கேப்டன்ஷியில் பெரிய குறைகளை சொல்ல முடியவில்லை. அதே சமயம், பேட்டிங்கிலும் நேற்று 16 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் 29 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
Photo: Getty
இந்த நிலையில், இளம் வயதில் இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்று ரிஷப் பண்ட் , தோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.
தோனி 26 வருடம் 68 நாட்களில் கேப்டன் பொறுப்பை ஏற்றார். தற்போது ரிஷப் பண்ட் 24 வருடம் 248 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். டி20 அணிக்கு கேப்டனாக மாறிய இளம் வீரர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார்.
விக்கெட் கீப்பராக இருந்து இந்திய அணிக்கு கேப்டனாக மாறிய 4வது வீரர் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.