பாதுகாப்பு அம்சங்களால் உயிர் தப்பினார்., ரிஷப் பண்ட் ஓட்டிய மெர்சிடிஸ் கார் பற்றிய சுவாரசிய தகவல்கள்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் விபத்துக்குள்ளான Mercedes-AMG GLE43 Coupe கார் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ரிஷப் பண்ட் கார் விபத்து
ரிஷப் பண்ட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அவர் ஓட்டிச் சென்ற மெர்சிடிஸ் கார் டிவைடரில் மோதி தீப்பிடித்ததில் எரிந்து கிட்டத்தட்ட சாம்பலானது.
ஆனால், 25 வயதான ரிஷப் பண்ட் தீப்பிடித்த காரில் இருந்து கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியேறி காயங்களுடன் உயிர் தப்பினர். அவரது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிஷப் பண்ட் ஓட்டிய மெர்சிடிஸ் காரின் விவரங்கள் இதோ:
ரிஷப் பந்த் Mercedes-AMG GLE 43 4MATIC Coupe காரை ஓட்டி வந்தார். இந்த கார் இந்தியாவில் 2017 முதல் 2020 வரை, ஒரு கோடிக்கும் குறைவாக (எக்ஸ்-ஷோரூம்) விற்கப்பட்டது, பின்னர் 2021-ல் புதிய மாடல் வெளியானது.
இந்த SUV-Coupe கார் ஹைப்ரிட் 3 லிட்டர் V6 biturbo எஞ்சின் கொண்டது, இது ஒன்பது வேக ஆட்டோ கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் எஞ்சின், 362 பிஎச்பி மற்றும் 520 என்எம் பீக் டார்க்கை வெளிப்படுத்தக்கூடியது.
சக்திவாய்ந்த இந்தக் கார் 0-100 கிமீ வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டிவிடும். இந்தக் காரின் அதிகபட்ச வேகம் எலக்ட்ரானிக் முறையில் 250 கிமீ வேகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட யூனிட்டாக (CBU) இந்தியாவில் விற்கப்பட்டது, அதாவது இது இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது மற்றும் இங்கு உருவாக்கப்படவில்லை அல்லது அசெம்பிள் செய்யப்படவில்லை.
பெரும்பாலான மெர்சிடிஸ் கார்களைப் போலவே, Mercedes AMG GLE 43 4MATIC Coupe-லும் பாதுகாப்பு தொழில்நுட்பம் மற்றும் 7 ஏர்பேக்குகள், இழுவைக் கட்டுப்பாடு (traction control), ஆல்-வீல் டிரைவ் போன்ற அம்சங்கள் உள்ளன.