கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்திய ரிஷப் பண்ட்! மாநிலத்திலேயே முதல் நபர்
இந்திய கிரிக்கெட் அணி வீரரான ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார்.
உத்தரகாண்ட் மாநிலத்திலேயே அதிக வருமான வரி செலுத்திய நபராக கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார்.
ரிஷப் பண்ட்
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் துடுப்பாட்ட வீரராக விளையாடி வரும் ரிஷப் பண்ட் (Rishabh Pant), இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இடம்பெற்றுள்ளார்.

இந்த சூழலில், உத்தர்காண்டின் அதிகபட்ச வரி செலுத்துபவராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.
அதாவது, 2025-26 நிதியாண்டிற்காக ரிஷப் பண்ட் ரூ.23.84 கோடி வருமான வரி செலுத்தியிருக்கிறார். இதன்மூலம் மாநிலத்திலேயே அதிகபட்ச தனிநபர் வரி செலுத்துபவராக திகழ்கிறார். மேலும், ஒரு நிதியாண்டில் அதிக வரி செலுத்தியவராக அவர் தொடர்ந்து இரண்டாவது முறையாக திகழ்கிறார்.
ரிஷப் பண்டின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.150 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், விளம்பர ஒப்பந்தங்கள் மற்றும் கிரிக்கெட் மூலம் ஈட்டிய வருமானம் ஆகியவை அடங்கும்.
குறிப்பாக, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடனான ரூ.27 கோடி மதிப்பிலான ஒப்பந்தமும் இதில் அடங்கும்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |