ஐபிஎல்லில் செய்த தவறு.. பாடம் கற்றுக்கொண்டேன்: இந்திய அணி கேப்டன்
இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட உள்ள ரிஷப் பண்ட், ஐபிஎல் போட்டிகளில் கற்றுக்கொண்ட பாடம் தனக்கு உதவும் என தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டிருந்தார்.
ஆனால் காயம் காரணமாக அவர் தொடரில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து ரிஷப் பண்ட் கூறுகையில்,
'இது ஒரு நல்ல உணர்வு, ஆனால் மிகவும் நல்ல சூழ்நிலையில் வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் கேப்டன் பதவி வகிப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய அணியை வழி நடத்த வாய்ப்பு அளித்த கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐபிஎல் போட்டியில் செய்த தவறுகளில் இருந்து கற்றுக்கொண்டுள்ள பாடம், வரும் நாட்களில் எனக்கு உதவும் என்று கருதுகிறேன்.
Photo Credit: BCCI
கேப்டன் பதவியில் நான் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன். எனது கிரிக்கெட் ஏற்றம், இறக்கத்தில் உறுதுணையாக இருந்த அனைத்து நலம் விரும்பிகளுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்' என தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்ட பண்ட், சில நேரங்களில் கோபப்பட்டது விமர்சனங்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Photo Credit: Twitter