சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் ரிஷப் பண்ட்- வைரல் வீடியோ
கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார்.
இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவர் காயத்தில் இருந்து குணமடைந்தார். அதன்பின் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
தற்போது முழுமையாக குணம் அடைந்துள்ள ரிஷப் பண்ட் கிரிக்கெட் களத்துக்கு திரும்ப தயாராக உள்ளார்.
இம்மாதம் தொடங்க உள்ள IPL போட்டியில் அவர் விளையாட உள்ளார். டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரரான ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்பட உள்ளார்.
மார்ச் 22-ம் தேதி IPL போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் அதில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்யமாட்டார் என்று டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சிறுவர்களுடன் கோலி குண்டு விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Rishabpant playing goli ? pic.twitter.com/yFBusp79mo
— abhi (@abhiramlodi) March 3, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |