டெஸ்ட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனை படைத்த ரிஷப் பண்ட் - அடுத்து நிகழ்ந்த சோகம்

Rishabh Pant Indian Cricket Team England Cricket Team
By Karthikraja Jul 24, 2025 05:42 AM GMT
Report

 டெஸ்ட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை ரிஷப் பண்ட் படைத்துள்ளார்.

ரிஷப் பண்ட் சாதனை

இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி, நேற்று மான்செஸ்டரில் தொடங்கியது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 264 ஓட்டங்கள் குவித்தது. 

india vs england 4th test

இதில், கேஎல் ராகுல் 46 ஓட்டங்களும், ஜெய்ஸ்வால் 58 ஓட்டங்களும், சுப்மன் கில் 12 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்ததாக விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மற்றும் சாய் சுதர்ஷன் இணைந்து நிதானமாக ஆடினர். 

41 வயதில் சூப்பர்மேனாக கேட்ச்! ஏபி டிவில்லியர்ஸின் வீடியோ வைரல்

41 வயதில் சூப்பர்மேனாக கேட்ச்! ஏபி டிவில்லியர்ஸின் வீடியோ வைரல்

இதில், 19 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை ஒன்றை ரிஷப் பண்ட் படைத்தார். 

rishabh pant record

இங்கிலாந்தில், 1000 ஓட்டங்கள் எடுத்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இங்கிலாந்தில், 13 போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட், இந்த சாதனையை படைத்துள்ளார்.

காலில் காயம்

தொடர்ந்து, 37 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்ற ரிஷப் பண்ட், அதனை காலில் வாங்கி, வலியால் துடித்தார். 

பிசியோதெரபிஸ்ட் உடனடியாக களத்திற்கு வந்து பண்டின் ஷூவை கழற்றி பார்த்த போது, காலில் ரத்தம் வழிந்ததோடு, சுண்டு விரலில் வீக்கம் இருந்தது. 

புதிய கிரிக்கெட் அணியை வாங்கியுள்ள காவ்யா மாறன் - எத்தனை கோடிக்கு தெரியுமா?

புதிய கிரிக்கெட் அணியை வாங்கியுள்ள காவ்யா மாறன் - எத்தனை கோடிக்கு தெரியுமா?

இதையடுத்து ரிட்டயர்டு ஹர்ட் முறையில் அவர் களத்தில் இருந்து வெளியேறினார். அவரால் நடக்க முடியாத காரணத்தால் வாகனம் மூலம் பெவிலியன் திரும்பினார். 

rishabh pant injury update

பண்டை ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், இந்திய அணியின் மருத்துவர் குழு கண்காணித்து வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. லார்ட்ஸில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் கை விரலில் காயமடைந்த பந்த், இப்போது காலில் காயமடைந்துள்ளார்.        

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US