எங்களை விட சிறப்பாக விளையாடியதற்கு நன்றி கூற வேண்டும்: கேப்டன் பண்ட்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக படுதோல்வியடைந்தது ஏமாற்றமளிப்பதாக, இந்திய அணியின் தலைவர் ரிஷாப் பண்ட் தெரிவித்தார்.
ரிஷாப் பண்ட் கூறிய விடயம்
கவுகாத்தியில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 408 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் படுதோல்வியடைந்தது. 
இந்த டெஸ்டில் அணித்தலைவராக செயல்பட்ட ரிஷாப் பண்ட் (Rishabh Pant) முதல் இன்னிங்சில் 7 ஓட்டங்களும், இரண்டாவது இன்னிங்சில் 13 ஓட்டங்களும் மட்டுமே எடுத்து சொதப்பினார். 
போட்டிக்கு பின்னர் பேசிய பண்ட், "நிச்சயமாக இது கொஞ்சம் ஏமாற்றமளிக்கிறது, உங்களுக்கும் தெரியும். ஆனால் ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். மேலும், எங்களை விட சிறப்பாக கிரிக்கெட் விளையாடியதற்கு நீங்கள் எதிரணியினருக்கு நன்றி கூற வேண்டும்.
ஏனெனில், இதுபோன்ற ஒரு தொடரில் நீங்கள் அதிகமாக யோசித்தால் ஏற்கனவே கடினமாக இருந்ததால், நீங்கள் கற்றுக்கொண்டதை எடுத்துக்கொண்டு ஒரு அணியாக நிலைத்திருக்க வேண்டும் உங்களுக்கு தெரியும்.
நிச்சயமாக அவர்கள் தொடரில் ஆதிக்கம் செலுத்தினர்; ஆனால் அதே நேரத்தில் நீங்கள் கிரிக்கெட்ட சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது" என்றார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |