கடைசி ஓவரில் எளிதான ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்ட ரிஷப் பண்ட்! தப்பிய இலங்கை வீரரின் வீடியோ
ஆசிய கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் எளிதான ரன் அவுட்டை தவறவிட்ட ரிஷப் பண்ட்.
தினேஷ் கார்த்திக்குக்கு பதிலாக ரிஷப்பை இந்திய அணியில் எடுத்தது ஏன் என ரசிகர்கள் கேள்வி.
ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 ஆட்டத்தில் கடைசி கட்டத்தில் இந்திய அணி விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் ரன் அவுட்டை தவறவிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.
இப்போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. போட்டியின் இறுதி ஓவரில் இலங்கை அணிக்கு வெற்றி பெற 7 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் பனுகா ராஜபக்சாவும், தஷுன் ஷனகாவும் இருந்தனர்.
ஷனகா பேட்டிங் ஆடிய போது அவருக்கு வீசப்பட்ட பந்து விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் சென்றது. இதையடுத்து ஷனகா ரன் எடுக்க ஓடிய போது, எளிதாக ரன் அவுட் ஆக்கும் வாய்ப்பை ரிஷப் தவற விட்டார்.
#RishabhPant bro being wicket-keeper for so long how can you not target the stumps being so close to it. I think It could have saved last 2 runs and we would have definitely won the match#dineshkarthik deserved your place both in bating and wicket-keeping. pic.twitter.com/IxhsggV6Yj
— TESLA (@TESLA38024075) September 6, 2022
இதன் காரணமாக இலங்கை அணிக்கு இரண்டு ரன்கள் கிடைத்தது. பின்னர் இலங்கை அணி அடுத்தடுத்த ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
பண்ட் மட்டும் ஷனகாவை அவுட் செய்திருந்தால் போட்டியின் முடிவு மாறியிருக்கும் எனவும், தினேஷ் கார்த்திக்கை பெவிலியனில் உட்கார வைத்துவிட்டு பண்டை அணியில் எடுத்ததற்கு இந்திய அணி தகுந்த விலையை கொடுத்துள்ளது எனவும் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும் ரிஷப் பண்டை விட தினேஷ் கார்த்திக்குக்கு தான் அணியில் இடம்பெறுவதற்கான முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
This man deserved a chance ?#INDvSL #RishabhPant pic.twitter.com/8bbuHcudzc
— itsaryan (@aryans779) September 6, 2022