இணையத்தில் வைரலாகும் ரிஷி சுனக்கின் வீடியோ: யார் அந்த விஜய் மாமா?
பிரபல சமையல்காரர் சஞ்சய் ரெய்னாவுடன் வீடியோ அழைப்பில் தோன்றிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்.
விஜய் மாமா பற்றி அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம்.
பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிஷி சுனக் பிரபல சமையல்காரர் சஞ்சய் ரெய்னா உடனான சுருக்கமான மற்றும் மகிழ்ச்சியான வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில், பிரபல சமையல்காரர் சஞ்சய் ரெய்னா கையில் கேமராவுடன் “மாமா, உங்களுக்கு வணக்கம் சொல்ல யாரோ இருக்கிறார்கள்” என்று வியப்புடன் தெரிவித்து விட்டு கேமராவை இடது புறமாக திருப்புகிறார்.
Who is Vijay mama ?@TheVijayMallya ?
— bchandra (@bchandra10) October 27, 2022
அப்போது கேமரா முன் தோன்றிய பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் “விஜய் மாமா, ஹாய். இது ரிஷி, எப்படி இருக்கீங்க?” என்று கேட்டு விட்டு விஜய் மாமாவை 10 டவுனிங் தெருவிற்கு வருமாறு அழைத்தார்.
அத்துடன் நீங்கள் இங்கே வந்து என்னைப் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன், எனவே நீங்கள் இங்கு வந்ததும், உங்கள் மருமகன் சஞ்சய் உங்களை டவுனிங் தெருவுக்கு அழைத்து வரச் சொல்லுங்கள் என்று தெரிவித்து கைகளை அசைத்தார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது, அத்துடன் அந்த விஜய் மாமா பற்றி அறிந்து கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டு இணையத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: உச்சத்தை தொட்ட உணவு பொருட்கள்: ஜேர்மனியில் அதிகரிக்கும் நுகர்வோர் விலைகள்
அதில் ஒரு பயனர், யார் அந்த விஜய் மாமா? என்று கேட்டுவிட்டு அதற்கு விஜய் மல்லையா? என்ற பதில் கேள்வியையும் கேட்டுள்ளார்.
மற்றொரு நபர் சுனக்கின் அடக்கமான தன்மையை எடுத்துக்காட்டி, ரிஷி சுனக் நல்ல மனிதராக வருகிறார் என தெரிவித்துள்ளார்.