ரிஷி சுனக் Microsoft, Anthropic நிறுவனங்களில் மூத்த ஆலோசகராக நியமனம்
ரிஷி சுனக் Microsoft மற்றும் Anthropic நிறுவனங்களில் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், உலகளாவிய தொழில்நுட்ப வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில், Microsoft மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான Anthropic ஆகிய நிறுவனங்களில் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது, அவர் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராகவும், இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனாகவும் உள்ளார்.
இது ஒரு பகுதி நேர ஆலோசனையாகும். இதில் அவர் உலக பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலவரங்கள் தொடர்பான உயர்நிலை திட்ட ஆலோசனைகளை வழங்குவார்.
மைக்ரோசாப்ட் பல ஆண்டுகளாக உற்பத்தித் திறனை மேம்படுத்தி வந்துள்ளது. அதேசமயம், அந்தரோபிக் செயற்கை நுண்ணறிவின் எல்லைகளை விரிவுபடுத்தும் முன்னணி ஆய்வகமாக திகழ்கிறது.
சுனக் இந்த பதவியில் கிடைக்கும் ஊதியத்தை, கணித திறன்களை மேம்படுத்தும் நோக்கில் தனது Richmond Project என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஜூலை முதல் Goldman Sachs நிறுவனத்திலும் மூத்த ஆலோசகராக பணியாற்ற தொடங்கியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rishi Sunak, Rishi Sunak Microsoft, Microsoft adviser, Anthropic AI, Artificial Intelligence adviser