லிஸ் டிரஸ் தவறுகளை சரிசெய்யவே நான் வந்துள்ளேன்: பிரதமராக முதல் உரையில் ரிஷி சுனக் அறிவிப்பு
முறைப்படி அரசாங்கத்தை அமைக்க ரிஷி சுனக்கிற்கு மன்னர் அழைப்பு.
லிஸ் டிரஸ் ஆற்றிய தவறுகளை சரிசெய்யவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன் என பேச்சு.
பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்ற பின் ரிஷி சுனக் ஆற்றிய தனது முதல் உரையில், முந்தைய பிரதமர் லிஸ் டிரஸ் ஆற்றிய தவறுகளை சரிசெய்ய தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸின் மோசமான பொருளாதார திட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து, அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற அடுத்த பிரதமருக்கான போட்டியில் வெற்றி பெற்று, பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Newly appointed Prime Minister Rishi Sunakhttps://t.co/PAiZ4D1jU3
— Sky News (@SkyNews) October 25, 2022
? Sky 501, Virgin 602, Freeview 233 and YouTube pic.twitter.com/LqXaeNE6hp
இதையடுத்து ஆட்சி அதிகாரத்தை அதிகாரப்பூர்வமாக எடுப்பதற்கு முன்பு, இன்று அவர் மன்னர் மூன்றாம் சார்லஸால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அழைக்கப்பட்டு முறைப்படி அரசாங்கத்தை அமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்த நிலையில் நாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரிஷி சுனக் எண் 10க்கு வெளியே ஆற்றிய முதல் உரையில், முந்தைய பிரதமர் லிஸ் டிரஸ் ஆற்றிய தவறுகளை “சரிசெய்ய” தான் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
அத்துடன் உங்களுடைய நம்பிக்கையை நான் சம்பாதிப்பேன் என்றும், பணிகள் குறித்து அச்சம் கொள்ளவில்லை, சேவை செய்வதற்கான வாய்ப்பு வரும்போது நீங்கள் அந்த தருணத்தை கேள்வி கேட்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே நாட்டை எதிர்காலத்தில் வழிநடத்தவும், அரசியலுக்கு மேலாக உங்கள் தேவைகளை முன்வைக்கவும், எனது கட்சியின் சிறந்த மரபுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கத்தை அடையவும், உருவாக்கவும் தயாராக இருக்கிறேன்.
நாம் ஒன்றாக நம்ப முடியாத விஷயங்களை சாதிக்க முடியும். பலர் செய்த தியாகங்களுக்கு தகுதியான எதிர்காலத்தை உருவாக்குவோம், ஒவ்வொரு நாளும் நம்பிக்கையுடன் அடுத்த நாளை நிரப்புவோம் என தெரிவித்துள்ளார்.
SKY NEWS
கூடுதல் செய்திகளுக்கு: புடினின் கையில் காணப்படும் மர்ம தடய குறிகள்: அவரின் வலியே அணுசக்தி அச்சுறுத்தலுக்கு காரணம்
மேலும் இப்போது நமது நாடு ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது, இதனால் கடினமான முடிவுகள் வரப்போகின்றன என்று நேற்று எச்சரித்த தகவலை மீண்டும் அழுத்தமாக இன்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக பிரதமராக தனது இறுதி உரையில் பேசிய லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கிற்கு வாழ்த்தினை தெரிவித்தார், அத்துடன் பிரகாசமான நாட்கள் வரவுள்ளது என்று எனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.