புடினின் கையில் காணப்படும் மர்ம தடய குறிகள்: அவரின் வலியே அணுசக்தி அச்சுறுத்தலுக்கு காரணம்
தடய குறிகள் புடின் நீண்ட கால ஸ்டீராய்டு பயன்பாட்டிற்கு உள்ளானதை காட்டுகிறது.
அணுசக்தி அச்சுறுத்தல்கள் அவர் எதிர்கொள்ளும் வலியிலிருந்து தோன்றியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கையில் ஏற்பட்டுள்ள IV தடய குறிகள், அவர் புற்றுநோயுடன் போராடுகிறார் என்ற வதந்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சமீபத்தில் ரியாசான்(Ryazan) பிராந்தியத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாமிற்கு சென்று ஆய்வு செய்தார், அங்கு அவர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு தனது வெளிப்படையான வலிமையை வெளிப்படுத்தினார்.
AFP via Getty Images
இது தொடர்பான வீடியோ காட்சிகளை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் ரஷ்ய அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனலான Zvezda பகிர்ந்து இருந்தது. அதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் வலது கையில் மர்மமான IV தடய குறிகள் காணப்பட்டன.
இந்த நிலையில் முன்னாள் உக்ரைன் நிருபர் தெரிவித்துள்ள தகவலில், புடினின் வீங்கிய முகம் மற்றும் அவர் கையில் காணப்படும் தடய குறிகள் நீண்ட கால ஸ்டீராய்டு பயன்பாட்டிற்கு உள்ளானதை காட்டுகிறது என தெரிவித்துள்ளார்.
Russian Media
இதற்கிடையில் புடினின் சமீபத்திய புற்றுநோய் வதந்திகளில் அவர் பலவீனமடைந்து வருவதாகவும், அவரது அணுசக்தி அச்சுறுத்தல்கள் அவர் எதிர்கொள்ளும் வலியிலிருந்து தோன்றியதாகவும் தெரிவித்துள்ளன.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் பயங்கர துப்பாக்கி சூடு: இருவர் பலி, பொலிஸார் விசாரணை
மேலும் இதற்கு முன்னதாக வெளியான இது வீடியோக்களில் ரஷ்ய ஜனாதிபதி புடின் கை, கால் நடக்கத்துடன் இருப்பதைக் காட்டியது, இவை புடினுக்கு பார்கின்சன் நோய் இருக்கிறது என்பது போன்ற வதந்திகளை உருவாக்கியது.