பிரித்தானியாவில் பயங்கர துப்பாக்கி சூடு: இருவர் பலி, பொலிஸார் விசாரணை
கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் பகுதியில் துப்பாக்கி சூடு.
20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிப்பு.
பிரித்தானியாவின் கிழக்கு லண்டன் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்து இருப்பதாக பெருநகர் காவல்துறை தெரிவித்துள்ளது.
கிழக்கு லண்டனின் இல்ஃபோர்டில் (Ilford) பகுதியில் உள்ள ஹென்லி (Henley) சாலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:15 மணியளவில் பயங்கர சண்டை மற்றும் துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து அழைக்கப்பட்ட பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் 3 பேரை கண்டுபிடித்தனர்.
SKY NEWS
இதில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார். அதிலிருந்து சிறிது நேரத்தில் மற்றொரு நபர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
30 வயதுடைய மூன்றாவது நபர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் பொலிஸார் தெரிவித்துள்ள தகவலில், உயிரிழந்த 20 வயது மதிக்கத்தக்க நபரின் அடையாளம் தங்களுக்குத் தெரியும் என்றும், துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இன்னொரு நபரை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
அத்துடன் பதில் தாக்குதல் நடத்தியவர்களில் ஆயுதம் தாங்கிய பொலிஸாரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூடுதல் செய்திகளுக்கு: Dirty Bomb-களை உக்ரைன் பயன்படுத்துகிறதா? அணுசக்தி பயங்கரவாதச் செயல் என ரஷ்யா எச்சரிக்கை
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.