Dirty Bomb-களை உக்ரைன் பயன்படுத்துகிறதா? அணுசக்தி பயங்கரவாதச் செயல் என ரஷ்யா எச்சரிக்கை
உக்ரைன் “Dirty Bomb” எனப்படும் ஒருவகை கதிரியக்க பொருள் கொண்ட வெடிகுண்டை பயன்படுத்தலாம்.
உக்ரைன் ஒரு Dirty Bomb பயன்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என மேற்கத்திய ஆய்வாளர்கள் தகவல்.
போர் தாக்குதல்களில் உக்ரைன் “Dirty Bomb” எனப்படும் ஒருவகை கதிரியக்க பொருள் கொண்ட வெடிகுண்டை பயன்படுத்தலாம் என்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைனிய பகுதியில் தீவிரமடைந்து வரும் நிலையில், உக்ரைனிய பாதுகாப்பு படையினரின் தாக்குதல் அதிகரிக்க தொடங்கி இருப்பதால் ரஷ்ய படைகள் பின்வாங்க தொடங்கியுள்ளனர்.
UPI/Shutterstock
இதற்கிடையில் பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்க சகாக்களுடன் உரையாடிய ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு, போர் நடவடிக்கையில் உக்ரைன் (dirty bomb) எனப்படும் ஒருவகை கதிரியக்க பொருள் கொண்ட வெடிகுண்டை பயன்படுத்தலாம் என்ற புகாரை முன்வைத்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா உறுதியாக நிராகரித்தது, மேலும் ரஷ்யா தவறான கொடி நடவடிக்கைகளை திட்டமிடக்கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இந்தநிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று கூடும்போது, உக்ரைன் அழுக்கு வெடிகுண்டுகளை பயன்படுத்தலாம் என்ற குற்றச்சாட்டை ரஷ்யா எடுத்து செல்வதாக சமிக்ஞை செய்துள்ளது.
AP
அத்துடன் உக்ரைன் Dirty Bomb பயன்படுத்துவதை அணுசக்தி பயங்கரவாதச் செயலாக நாங்கள் கருதுவோம் என்று ரஷ்யாவின் ஐ.நா தூதர் வசிலி நெபென்சியா எச்சரித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
மேற்கத்திய ஆய்வாளர்கள் உக்ரைன் ஒரு Dirty Bomb பயன்படுத்துவதற்கு எந்த காரணமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
Ministry of Defence
கூடுதல் செய்திகளுக்கு: உறுப்பினர் பதவியிலிருந்து விலகும் டோரி ஆதரவாளர்கள்: ரிஷி சுனக்கின் வெற்றியால் கட்சிக்கு ஏற்படும் பின்னடைவு
இதற்கிடையில், இந்த கூற்றுக்கள் ரஷ்யா அத்தகைய தாக்குதலைத் தானே திட்டமிடுகிறது என்பதற்கான அறிகுறி என்று உக்ரைன் தெரிவித்துள்ளது.