சில மணி நேரங்களில் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம்: உச்சக்கட்ட பரபரப்பில் பிரித்தானிய அரசியல்
ரிஷி சுனக்கிற்கு 166 டோரி எம்.பிகளும், பென்னி மோர்டான்ட்-க்கு 25 டோரி எம்.பிகளும் ஆதரவு.
வேட்புமனு இன்று மதியம் 2 மணியுடன் முடிவடைய உள்ளதால் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம்.
பிரித்தானியாவில் பிரதமருக்கான போட்டியில் 100 டோரி எம்.பிக்களின் ஆதரவை பெற பென்னி மோர்டான்ட் பெற தவறினால், சில மணி நேரங்களில் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட லிஸ் டிரஸ், பதவியிலிருந்த 44 நாட்களிலேயே ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து பிரித்தானியாவின் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்து இருந்தது.
sky news
மேலும் அடுத்த பிரதமருக்கான தேர்தலில் போட்டியிடும் போட்டியாளர்களுக்கு குறைந்தது 100 டோரி எம்.பி-களின் ஆதரவு இருக்க வேண்டும் எனவும், வேட்புமனு தாக்கல் திங்கட்கிழமை மதியம் 2 மணியுடன் நிறைவடையும் எனவும் தலைமைத் தேர்தல் அதிகாரி சர் கிரஹாம் பிராடி (Sir Graham Brady) தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பிரித்தானிய பிரதமருக்கான போட்டியில் முன்னணியில் இருக்கும் முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி மோர்டான்ட் மற்றும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் இடையே டோரி எம்.பிக்களின் ஆதரவினை திரட்டும் கடுமையான போட்டி நிகழ்ந்து வருகிறது.
முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் ஏற்கனவே 100 டோரி எம்.பி-களின் ஆதரவை பெற்று பிரதமருக்கான போட்டியில் தனது ஓட்டத்தை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், முன்னாள் பாதுகாப்பு மந்திரி பென்னி மோர்டான்ட் டோரி எம்.பிக்களின் ஆதரவை பெற தொடர்ந்து போராடி வருகிறார்.
திங்கட்கிழமை 12 மணி நிலவரப்படி, ரிஷி சுனக்கிற்கு 166 டோரி எம்.பிகளும், பென்னி மோர்டான்ட்-க்கு 25 டோரி எம்.பிக்களின் ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ளது.
100 எம்.பி-க்களின் ஆதரவு இருந்தால் தான் பிரதமருக்கான போட்டியில் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், வேட்புமனு இன்று மதியம் 2 மணியுடன் முடிவடைய உள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: பிரித்தானியாவில் 11 வயது இளம்பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்: பிரபஞ்ச மையம் என பெற்றோர் உருக்கம்
ஒருவேளை இன்று மதியம் 2 மணிக்குள் டோரி எம்.பிக்களில் 100 ஆதரவாளர்களைப் பெற பென்னி மோர்டான்ட் தவறிவிட்டால், இன்னும் சில மணி நேரங்களுக்குள் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.