இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - தமிழ்நாட்டில் 66 பேருக்கு பாதிப்பு
இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா
2019 ஆம் ஆண்டு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனாவால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதனை கட்டுப்படுத்த உலகளவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், பலரையும் பொருளாதார ரீதியில் முடக்கியது.
தற்போது, மீண்டும் பல்வேறு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.
சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. ஹாங்காங்கில் மட்டும் ஒரே வாரத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 66 பேருக்கு கொரோனா
இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் 257 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், அதிகபட்சமாக கேரளாவில் 95 பேருக்கும், தமிழ்நாட்டில் 66 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 59 வயது பெண்ணும், 14 வயது சிறுமியும் சமீபத்தில் உயிரிழந்தனர்.
ஆனால் இவர்களின் உயிரிழப்பு காரணம் கொரோனா இல்லை என்றும், ஏற்கனவே புற்றுநோய் மற்றும் சிறுநீரக பாதிப்பு இருந்ததால், அதன் காரணமாகவே உயிரிழந்தனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வீரியம் குறைந்த கொரோனா வைரஸே பரவி வருவதால், இது குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் கொரோனா கட்டுக்குள்தான் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |