பூமிக்குத் திரும்பும் சுனிதாவுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம்? அறிவியலாளர்கள் கூறும் தகவல்
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், ஒன்பது மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கிக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், இப்படி நீண்ட காலமாக விண்வெளியில் தங்கியிருப்பதால், அறிவியலாளர்கள் கருத்துப்படி, அவரது உடலில் பல உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கூறப்படுகிறது.
சுனிதாவுக்கு புற்றுநோய் பாதிக்கும் அபாயம்?
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸும், அவரது சக வீரரான பட்ச் விமோரும் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுவிட்டு எட்டு நாட்களில் பூமிக்குத் திரும்பவேண்டிய நிலையில், வரும் 16ஆம் திகதிதான் பூமிக்குத் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இப்படி நீண்ட காலமாக விண்வெளியில் தங்கியிருப்பதால், விண்வெளி வீரர்களுக்கு பல உடல் நல பாதிப்புகள் ஏற்படக்கூடும் என அறிவியலாளர்கள் கூறியுள்ளார்கள்.
சூரிய மற்றும் காஸ்மிக் கதிரியக்கம், புவியீர்ப்பு விசையின்மை மற்றும் மன அழுத்தத்தை சந்திக்கும் விண்வெளி வீரர்களுக்கு, அவர்கள் பூமிக்குத் திரும்பிய பிறகு புற்றுநோய் ஏற்படும் அபாயம் கூட உள்ளதாம்.
மேலும், விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால், உடலிலுள்ள திரவங்கள் மேல் நோக்கி, அதாவது தலையை நோக்கி பாய்வதால், மண்டையோட்டுக்குள் அழுத்தம் அதிகரிக்கும்.
இதனால், தலைவலி, பார்வையில் பிரச்சினைகள் மற்றும் சொல்லப்போனால், மூளையின் கட்டமைப்பிலேயே மாற்றங்கள் ஏற்படலாம்.
இதற்கிடையில், பூமிக்குத் திரும்பும் சுனிதாவும் வில்மோரும், பூமியின் புவியீர்ப்பு விசையை பழக கஷ்டப்படவேண்டியிருக்கும் என்கிறார் முன்னாள் நாசா விண்வெளி வீரர் ஒருவர்.
மேலும், விண்வெளியில் அதிக நேரம் செலவிடும் விண்வெளி வீரர்கள், தங்கள் கால்களிலுள்ள தடிமனான தோலை இழந்துவிடுவார்களாம்.
ஆகவே, பூமிக்குத் திரும்பியதும், அவர்கள் குழந்தைகளைப்போல, கவனமாகத்தான் நடக்கவேண்டியிருக்கும்.
இவை மட்டுமல்ல, பூமிக்குத் திரும்பியதும், ப்ளூ காய்ச்சல் போன்ற பாதிப்பு உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விண்வெளி வீரர்களின் உடல், பூமியில் வாழப் பழக, பல வாரங்கள் பிடிக்கும் என்கிறார்கள் முன்னாள் விண்வெளி வீரர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |