இதைச் செய்தாலே போதும்... ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை 83 சதவிகிதம் குறைக்கலாம்
N95 அல்லது KN95 வகை மாஸ்குகளை முறையாக அணிந்தாலே, ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை 83 சதவிகிதம் குறைக்கலாம் என அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலிருந்து தெரியவந்துள்ளது.
அதே நேரத்தில், துணி வகை மாஸ்குகள் 50 சதவிகிதமும், மருத்துவமனைகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் சர்ஜிக்கல் மாஸ்குகள் 63 சதவிகிதமும் கொரோனா தொற்று ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என்றும் அந்த ஆய்விலிருந்து தெரியவந்துள்ளது.
2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் டிசம்பர் வரையில், 2,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.
பொதுவாகவே மாஸ்குகள் கொரோனா தொற்றும் அபாயத்தைக் குறைப்பது உண்மைதான் என்றாலும், இந்த N95 அல்லது KN95 வகை மாஸ்குகள் அதிகபட்சம் கொரோனா தொற்றும் அபாயத்தைக் குறைப்பது தெரியவந்துள்ளது.
அத்துடன், Omicron வகை கொரோனா தொற்றையும் தடுக்கும் திறன் வாய்ந்தவையாக இந்த N95 அல்லது KN95 வகை மாஸ்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.