புடினுடைய நேரடி கோபத்துக்கு ஆளாகும் அபாயம்: பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு
உக்ரைன் போர் தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள ஒரு முடிவால், நேட்டோ நாடுகள், ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய நேரடி கோபத்துக்கு ஆளாகும் அபாயம் உருவாகியுள்ளது.
பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து, உலக நாடுகள் பலவற்றிலுள்ள ரஷ்யர்களின் சொத்துக்கள் பல முடக்கப்பட்டன.
அவ்வகையில், பிரான்சிலுள்ள ரஷ்ய செல்வந்தர்களின் முடக்கப்பட்ட சொத்துக்களிலிருந்து வரும் வருவாயை, போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக கொடுக்க இருப்பதாக பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு ஆயுதங்களும், உபகரணங்களும் வாங்க அந்த பணம் பயன்படுத்தப்பட உள்ளது. அதற்கு ஐரோப்பிய ஆணையமும் ஒப்புதலளித்துள்ளது.
இதனால், பிரான்ஸ் முதலான நேட்டோ நாடுகள், ரஷ்ய ஜனாதிபதி புடினுடைய நேரடி கோபத்துக்குள்ளாகும் அபாயம் உருவாகியுள்ளது.
ரஷ்ய செல்வந்தர்களுக்கு சொந்தமான 300 பில்லியன் டொலர்களை மேற்கத்திய நாடுகள் முடக்கிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |