புதிய River Indie Gen 3 மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்
River EV நிறுவனம் தனது Indie மின்சார ஸ்கூட்டரின் மூன்றாவது தலைமுறை பதிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த பைக்கின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,45,999-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பதிப்பில் பல மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய மாற்றமாக Ceat நிறுவனத்தின் புதிய டயர்கள் இதில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை 11mm உயரமான sidewall கொண்டவை, மேலும் சாலையின் அதிர்வுகளை சிறப்பாக உறிஞ்சும் திறன் கொண்டவை.
6-inch LCD console அமைப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டருடன் இணைக்கும் செயலியில் தற்போது பயண புள்ளிவிவரங்கள், ஹில்-ஹோல்ட் உதவி, சார்ஜிங் தகவல்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தரவுகளை பார்க்கமுடியும்.
River Indie Gen 3 ஸ்கூட்டர் 14-inch alloy wheels, முன்புறம் ஹைட்ராலிக் டாம்பர்கள் கொண்ட டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், பின்புறம் காயில் ஸ்பிரிங் மற்றும் ஹைட்ராலிக் டாம்பர்கள் கொண்ட அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இரு முனைகளிலும் 200mm டிஸ்க் பிரேக் மற்றும் Adaptive Regeneration கொண்ட Combined Braking System உள்ளது.
4 kWh பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த ஸ்கூட்டர், 163 km IDC வரம்பை வாக்களிக்கிறது. உண்மையான range 70 முதல் 110 km வரை மாறுபடுகிறது.
மேலும், LED விளக்குகள், USB சார்ஜிங் போர்ட், பார்கிங் உதவி, 43 லிட்டர் underseat storage மற்றும் 12 லிட்டர் glovebox ஆகிய பல சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |