சூட்கேஸில் சடலமாக மீட்கப்பட்ட லண்டன் பெண்: கணவரின் நாடகம் அம்பலம்
கிழக்கு லண்டனில் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் தேம்ஸ் நதியில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கணவரே கொலை செய்து
ஏப்ரல் 30ம் திகதி சுமா பேகம் என்ற 24 வயது பெண் மாயமானதாக கூறி பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் முதற்கட்ட விசாரணையில் அவரது கணவரே கொலை செய்து சடலத்தை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து லியா ஆற்றில் வீசியதாக தெரியவந்தது.
Image: Runner Media
இதனையடுத்து பொலிசார் மற்றும் நிபுணர்கள் குழு, ஆற்றில் சடலத்தை தேடும் பணிகளை துவங்கினர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பகல் சூட்கேஸுடன் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு உறுதி செய்துள்ளது.
மேலும், குறித்த தகவலை சுமா பேகத்தின் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளதாகவும், அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடற்கூறு ஆய்வுகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சுமா பேகத்தின் கணவர் 45 வயதான அமினன் ரஷ்மான் கைது செய்யப்பட்டு, மே 4ம் திகதி அவர் மீது கொலை வழக்கும் பதியப்பட்டது.
மனைவியை கொலை செய்தாரா?
மே 9ம் திகதி அவர் ஓல்டு பெய்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பெங்காலி மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் அவரது பெயர், பிறந்த ஆண்டு உள்ளிட்ட தகவல்களை நீதிமன்ற உறுதி செய்துள்ளது.
Image: Met Police
லண்டனில் Orchard Place பகுதியில் குடியிருந்து வந்த 45 வயது சுமா பேகம் என்ற பெண்மணி கடைசியாக ஏப்ரல் 28ம் திகதி உயிருடன் காணப்பட்டர் என பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமது மனைவியைக் கொன்று அவரது சடலத்தை ஒரு சூட்கேஸில் அடைத்து கணவனே லியா நதியில் வீசியுள்ளதாக விசாரணை அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
அமினன் தமது மனைவியை கொலை செய்தாரா அல்லது தற்கொலைக்கு தூண்டினாரா என்பது தொடர்பில் குற்றச்சாட்டு மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏப்ரல் 30ம் திகதி சுமா பேகம் மாயமானதாக புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு லியா ஆற்றில் வீசப்பட்டதாக அவர் கணவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.