CT 2025 தொடங்கும் முன்.,சொந்த மண்ணில் முத்தரப்பு தொடரை இழந்த பாகிஸ்தான் - கேப்டன் கூறிய காரணம்
தவறான நேரத்தை விக்கெட்டை இழந்துவிட்டதாக பாகிஸ்தான் அணித்தலைவர் ரிஸ்வான் தோல்வி குறித்து கருத்து தெரிவித்தார்.
நியூசிலாந்து வெற்றி
பாகிஸ்தானின் கராச்சியில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்று வாகை சூடியது.
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்த தொடரில் மோதின. தென் ஆப்பிரிக்கா இரண்டு தோல்விகளை சந்தித்ததால் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.
முதலில் ஆடிய பாகிஸ்தான் 242 ஓட்டங்கள் எடுத்தது. நியூசிலாந்து 45.2 ஓவரில் 243 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முகமது ரிஸ்வான்
இன்னும் நான்கு நாட்களில் பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராஃபி (CT 2025) தொடங்க உள்ள நிலையில், சொந்த மண்ணில் முத்தரப்பு தொடரை முகமது ரிஸ்வான் தலைமையிலான அணி இழந்துள்ளது.
தோல்வி குறித்து பேசிய முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan), "ஆடுகளம் கடினமாக இருக்கும் என்று நினைத்ததால் நாங்கள் முதலில் துடுப்பாடினோம். பின் இது நடந்தது. அவர்களின் பந்துவீச்சாளர்கள் தான் இதனை செய்தனர்.
மூன்று விக்கெட்டுகளை இழந்த பிறகு சல்மானும், நானும் கூட்டணி உருவாக்க வேண்டியிருந்தது. 260 ஓட்டங்களை நோக்கி நாங்கள் சென்றோம்.
ஆனால் தவறான நேரத்தில் நான் அவுட் ஆனேன். ஃபீல்டிங்கை முன்னேற்ற வேண்டிய தேவை இருக்கிறது. நாங்கள் முன்னேற வேண்டிய இடமிது" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |