பிரித்தானியாவில் அதிகாலையிலேயே பயங்கர விபத்து: நால்வர் உயிரிழப்பு
பிரித்தானியாவின் கிரேட்டர் மான்செஸ்டரில் நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகினர்.
பயங்கர விபத்து
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள போல்டனின் விகன் சாலையில் தனியார் வாடகை ஒன்றும், ஒரு சீட் லியோன் காருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
Photo: Phil Taylor/SWNS
இந்த சம்பவம் அதிகாலை 12.45 மணியளவில் நடந்துள்ளது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் இரு வாகனங்களின் சாரதிகளும் அடங்குவர் என தெரிய வந்தது.
காவல்துறையின் தீவிர விபத்து விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
5 பயணிகள்
இதற்கிடையில் காயமடைந்த 5 பயணிகள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Photo: Phil Taylor/SWNS
சம்பவ இடத்தில் இருந்து இரு வாகனங்களும் அகற்றப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களில், அவை கடுமையாக சேதமடைந்திருந்ததும், ஒரு காரின் முன்பகுதி முற்றிலும் சிதைந்திருந்ததும் தெரிய வந்தது.
எனினும், இந்த விபத்து ஒரு காவல்துறை துரத்தலின் விளைவாக ஏற்பட்டது என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. ஆனால் அவை வதந்திகள் என உள்ளூர் அரசியல்வாதிகள் உடனடியாக மறுத்தனர்.
Photo: Phil Taylor/SWNS
Photo: Phil Taylor/SWNS
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |