எச்சில் ஊறும் சுவையில் ரோட்டுக்கடை காளான் மசாலா: எப்படி செய்வது?
காளான் மசாலா என்பது ரோட்டுக்கடைகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
இதனுடைய சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும்.
அந்தவகையில், வீட்டிலேயே சுவையான ரோட்டுக்கடை காளான் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- காளான்- 250g
- முட்டைகோஸ்- 250g
- மைதா- 4 ஸ்பூன்
- கார்ன் ப்ளார்- 1½ ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- கரம் மசாலா- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- மிளகாய் தூள்- 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- எண்ணெய்- தேவையான அளவு
- கறிவேப்பிலை- 1 கொத்து
- வெங்காயம்- 2
- தக்காளி சாஸ்- 8 ஸ்பூன்
- சில்லி சாஸ்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ், காளான் சேர்த்து அதில் மைதா, கார்ன் ப்ளார், இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கெட்டியாக பிணைந்துகொள்ளவும்.
பின் வாணலில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி இதனை சிறிய சிறியதாக பக்கோடா போல் பொறித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
பின்னர் இதில் தக்காளி சாஸ், சில்லி சாஸ், 1 ஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதில் 2 கப் தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போகும்வரை நன்கு கொதித்து வந்ததும் இதில் அரை ஸ்பூன் கார்ன் ப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்கவைக்கவும்.
இறுதியாக இதில் பொரித்த முட்டைகோஸ், காளானை சேர்த்து கெட்டியாகி வரும்வரை கிளறி இறக்கினால் சுவையான ரோட்டுக்கடை காளான் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |