டெலிவரி ஊழியர்கள் போல நடித்து நகைக்கடையில் கொள்ளை.., அதிர்ச்சியடைய வைக்கும் வீடியோ
டெலிவரி ஊழியர்கள் போல வேடமிட்டு பட்டப்பகலில் நகைக்கடையில் கொள்ளை அடிக்கும் நபர்களின் வீடியோ அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொள்ளையடிக்கும் வீடியோ
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளையர்கள் கொள்ளையடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அம்மாநிலத்தில் உள்ள காசியாபாத்தில் இருக்கும் நகைக்கடைக்கு நேற்று (ஜூலை 24) மதியம் 3.30 மணியளவில் டெலிவரி ஊழியர்கள் போல வேடமணிந்து கொள்ளையர்கள் வந்துள்ளனர்.
அதாவது கொள்ளையர்கள் இருவரும் ஸ்விக்கி மற்றும் பிளிங்கிட் டெலிவரி ஊழியகர்கள் போல உடைகளை அணிந்திருந்தனர்.
பின்னர், நகைக்கடையில் உள்ள நகைகளை எடுத்து தங்கள் பைகளில் போட்டுக் கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
நகைக்கடையில் இருந்து மொத்தம் சுமார் 20 கிலோ வெள்ளி மற்றும் 125 கிராம் தங்கம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#WATCH | Uttar Pradesh | Thieves disguised as delivery boys execute a robbery at a jewellery store in Ghaziabad. CCTV visuals of the crime. (24.07)
— ANI (@ANI) July 25, 2025
Visuals Source: Police pic.twitter.com/nPTgnWyIYV
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |