இளையராஜா பாராட்டு விழாவில் உற்சாகமாக காணப்பட்ட ரோபோ சங்கர் - வைரல் வீடியோ
மறைந்த காமெடி நடிகர் ரோபோ சங்கர் கடைசியாக் இசைஞானி இளையராஜா பாராட்டு விழாவில் உற்சாகமாக காணப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது.
ரோபோ சங்கர் 46 வயதில் செப்டம்பர் 18 இரவு 8.30 மணியளவில் காலமானார்.
சில வாரங்களுக்கு முன் மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்டிருந்த அவர், செப்டம்பர் 17-அன்று படப்பிடிப்பின் போது திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, உனதே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகு அழைத்துச் செல்லப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர் மீளமுடியாமல் உயிரிழந்தார்.
அவரது மறைவு தரையுலகத்தையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழுதியுள்ளது. சமூக ஊடகங்களில் இரங்கல் செய்திகள் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
இதற்கிடையில், இசைஞானி இலையராஜாவின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ரோபோ சங்கர் பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
அந்த நிகழ்வில், அவர் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் தோன்றினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த மற்றும் கமல் ஹாசனின் பாதங்களை தொட்டு ஆசீர்வாதம் பெற்றார்.
Rip #RoboShankar Sir 💔🥲 pic.twitter.com/YiUxf6Yk2B
— Udhay Anna Fans - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@UdhayAnnaFans) September 18, 2025
அவர் பொதுவெளியில் ஆரோக்கியமாக காணப்பட்ட இந்த கடைசி வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம் தமிழ் திரையுலகில் பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Robo Shankar on Ilaiyaraaja event, Robo Shankar death news, Robo Shankar Kamal hassan, Robo Shankar last video, Robo Shankar viral video