ரோபோ சங்கரின் இறுதி தருணங்கள் - சகோதரன் சிவராமன் உருக்கம்
நடிகர் ரோபோ சங்கரின் மரணம் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், அவரது மூத்த சகோதரர் சிவராமன், சங்கரின் இறுதி நாட்கள் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார்.
செப்டம்பர் 15-ஆம் திகதி, ரோபோ சங்கர் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்ற ஒரு திரைப்பட பூஜையில் கலந்துகொண்டார். அதன்பின் படப்பிடிப்பிலும் பங்கேற்றார்.
ஆனால், அன்றே அவர் சோர்வு மற்றும் மயக்கத்தை அனுபவித்ததாக கூறப்படுகிறது.
உடனே ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று ட்ரிப்ஸ் (IV Fluids) செலுத்தப்பட்ட பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பினார்.
ஆனால், உடல்நிலை மேலும் மோசமடைந்து, இரத்த வானதி எடுத்துள்ளார். மருத்துவர்கள் எண்டோஸ்கோபி செய்தபோது, அவரது உடலில் பல உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சிவராமன், சங்கரின் வாழ்க்கைப் பயணத்தையும் நினைவுகூர்ந்தார்.
6 வயதி தந்தையை இழந்த சங்கர், கல்லூரி காலத்தில் மேடை கலைஞராக மாற வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தார்.
நடிகர் கமல் ஹாசனின் தீவிர ரசிகராக இருந்த சங்கர், அவரின் நடனங்களை நகலெடுத்து அனைவரையும் கவர்ந்தார்.
ரோபோ சங்கரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்க
உடற்பயிற்சி மீது ஆர்வம் கொண்ட சங்கர், மிஸ்டர் மெட்ராஸ், மிஸ்டர் தமிழ்நாடு மிஸ்டர் இந்தியா போன்ற போட்டிகளில் பங்கேற்று இரண்டாம்,மூன்றாம் இடங்களை பெற்றுள்ளார்.
அலுமினியம் பவுடரை உடல் முழுவதும் பூசி, இசைக்கு ஏற்ப மார்பு தசைகளை அசைத்து நடனமாடும் தனித்துவமான நடனத்தால் ரோபோ சங்கர் என்ற பெயரை பெற்றார்.
1000 மேடைகளை நிகழ்ச்சி நடத்தி, பின்னர் திரைப்பட உலகில் புகழ் பெற்றார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Robo Shankar death news, Robo Shankars final days, Robo Shankars final movements, Robo Shankar passes away, Robo Shankar life story