கோயில் சடங்குகளை செய்ய 'ரோபோ' யானை! முதல்முறையாக கேரளாவில் அறிமுகம்
கேரளாவில் கோயில் ஒன்றில் மத சடங்குகளை செய்வதற்காக முதல் முறையாக ஒரு ரோபோ யானை அமைக்கப்பட்டுள்ளது.
ரோபோ யானை
சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் விலங்குகளின் நலன் குறித்த கவலைகளுக்கு மத்தியில், தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஒரு கோவிலில் ஒரு பெரிய இயந்திர யானை அமைக்கப்பட்டுள்ளது.
10 அடி 6 அங்குலம் (3.2 மீட்டர்) உயரம் கொண்ட இந்த இயந்திர யானை, இரிஞ்சாடப்பிள்ளி ராமன் என்று அழைக்கப்படுகிறது.
இந்த ரோபோ யானையை நன்கொடையாக வழங்கிய PETA அமைப்பின் செய்திக்குறிப்பின்படி, "பாதுகாப்பான மற்றும் கொடுமை இல்லாத" வழியில் இரிஞ்சாடப்பில்லி ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் விழாக்களை நடத்த இது பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
PETA India
துன்புறுத்தப்படுவதாக PETA குற்றச்சாட்டு
இந்தியாவில் சிறைபிடிக்கப்பட்ட யானைகளில் பெரும்பாலானவை சட்டவிரோதமாக அல்லது அனுமதியின்றி வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்று PETA அமைப்பு தெரிவித்துள்ளது.
விலங்குகள் கடுமையான தண்டனைகள் மற்றும் உலோக முனை கொண்ட கொக்கி கொண்ட ஆயுதங்களால் அடித்து துன்புறுத்தப்படுவதாக PETA India மேலும் கூறியது.
இதன் விளைவாக, பல யானைகளுக்கு வலிமிகுந்த காயங்கள் ஏற்படுகின்றன. போதுமான உணவு, தண்ணீர் அல்லது கால்நடை பராமரிப்பு இல்லாத யானைகள் சமூக விரோத நடத்தையை வெளிப்படுத்தலாம். விரக்தியடைந்த யானைகள் பெரும்பாலும் சிறையிலிருந்து விடுபட முயல்கின்றன, இதன் விளைவாக மற்ற விலங்குகள், மனிதர்கள் அல்லது சொத்துக்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று PETA கூறியது.
PETA India
ஞாயிற்றுக்கிழமை நன்கொடையாக வழங்கப்பட்ட ரோபோ யானையை கோவிலில் சேர்ப்பதற்காக 'நடையிருத்தல்' எனப்படும் சமய விழாவில் சமூக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கோவிலின் தலைமை அர்ச்சகர் ராஜ்குமார் நம்பூதிரி, இந்த நன்கொடைக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் இருப்பதாக கூறினார்.
PETA India
இந்த திட்டத்தின் ஆதரவாளரான நடிகை பார்வதி திருவோத்து, இந்த நடவடிக்கை விலங்குகள் "மரியாதையான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை" பெற உதவும் என்றார்.
1997 முதல் 2012 வரையிலான 15 ஆண்டு காலப்பகுதியில், சிறைபிடிக்கப்பட்ட யானைகள் கேரளாவில் 526 பேரைக் கொன்றதாக PETA இந்தியா தெரிவித்துள்ளது.