தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்றதால் பரபரப்பு
robot trying to attack customer in russia shop: தள்ளிவிட்ட வாடிக்கையாளரை ரோபோ தாக்க முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாடிக்கையாளரை தாக்க முயன்ற ரோபோ
உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனித வடிவிலான ரோபோட்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் ரோபோக்கள் மனிதர்களின் கட்டுப்பாடு இல்லாமல் செயல்பட வாய்ப்புள்ளது என்ற அச்சமும் மனிதர்களிடையே நிலவி வருகிறது.

அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடையில் வாடிக்கையாளரை தாக்க முயற்சித்த ரோபோவின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவில் உள்ள மின்னணு சாதன கடை ஒன்றில் வாடிக்கையாளர் அங்கிருந்த ரோபோவிடம் கை குலுக்க கையை நீட்டியுள்ளார்.
ஆனால் ரோபோ கையை நீட்டாததால் கோபத்தில் ரோபோவை லேசாக தள்ளியுள்ளார். உடனே ரோபோ அவரை தாக்க முயற்சித்துள்ளது.
A robot got VERY aggressive after being pushed
— Mario Nawfal (@MarioNawfal) September 2, 2026
It’s so over
Writer: Solpic.twitter.com/gVWd9rFpqI
அங்கிருந்த ஊழியர்கள் அதனை கட்டுப்படுத்த முயற்சித்த போது அவர்களையும் தாக்க முயற்சித்தது. அதன் பிறகு அந்த ரோபோவின் இயக்கத்தை நிறுத்தினர்.
இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் பலரும் இதனை டெர்மினேட்டர், இயந்திரன் என கருத்து தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய சிலர், இந்த ரோபோ ரிமோட் மூலம் இயக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |