அருங்காட்சியகத்துக்குச் சென்றவருக்கு அதிர்ச்சி கொடுத்த ரோபோ: அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி
துபாயிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிற்குச் சென்றிருந்த சுற்றுலாப்பயணி ஒருவர், மறக்கமுடியாத சம்பவம் ஒன்றை எதிர்கொண்டார்.
அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள செய்தியும் வீடியோவும் ஒரு தரப்பினருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ளன.
அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
துபாயிலுள்ள Museum of the Future என்னும் அருங்காட்சியகத்துக்கு சுற்றுலாப்பயணி ஒருவர் சென்றுள்ளார். அங்கு ஒரு ரோபோ நடந்து செல்வதை நின்று கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார் அவர்.
அவர் தன்னைக் கவனிப்பதை உணர்ந்த அந்த ரோபோ, சட்டென திரும்பி அவரைப் பார்த்து கையசைத்துள்ளது.
இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவரும் நிலையில், இப்படி ஒரு ரோபோ தானாக சிந்திக்குமானால், அது எதிர்காலத்தில் ஏதேனும் ஆபத்தை உருவாக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
அது தானாக நின்று கையசைத்ததா, அல்லது யாரேனும் அதை பின்னிருந்து இயக்கினார்களா என்பது தெரியவில்லை.
என்றாலும், செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு ஆபத்தாக முடிந்துவிடுமோ என்னும் அச்சம் சிலருக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |