களமிறக்கப்படும் ரோபோ எலிகள்: காரணம் இதுதான்
சீன விஞ்ஞானிகள் SQuRO எனப்படும் ரோபோ எலிகளை மீட்பு மற்றும் தேடுதல் பணிகளுக்கு உருவாக்கியுள்ளனர்.
பெய்ஜிங் தொழில் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் ரோபோ நாய்களுக்கு மாற்றாக இந்த ரோபோ எலிகளை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோ எலிகளால் ஒரு உண்மையான எலியைப் போலவே குனிந்து, நின்று, நடக்க, வலம் மற்றும் திரும்ப முடியும். மேலும் அதன் சொந்த எடையில் 91 சதவீதத்திற்கு சமமான சுமையையும் சுமக்க முடியும்.
சோதனைகளின் போது, SQuRo எலிகளால் 3.5 அங்குல அகலப் பாதை வழியாகச் செல்ல முடிந்தது. இதன் மூலம் மீட்பு, தேடுதல் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சி குழு கூறுகையில், 'SQuRo ரோபோக்கள் குறுகிய இடைவெளிகள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்புகளின் வழியாக சுறுசுறுப்பாக கடந்து செல்லும் மற்றும் தொடர்புடைய சூழ்நிலைகளில் கண்டறிதல் அல்லது போக்குவரத்து போன்ற பணிகளைச் செய்யும் திறன் கொண்டவை' என தெரிவித்துள்ளது.
மீன் முதல் நாய்கள் வரை, விலங்குகளின் பல ரோபோ பதிப்புகள் சமீபத்திய ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.