தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம்.., இஸ்ரோ தலைவர் கூறிய முக்கிய தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் ராக்கெட் ஏவுதளம் இன்னும் 2 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் என்று இஸ்ரோ தலைவர் கூறியுள்ளார்.
ராக்கெட் ஏவுதளம்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஒரே நேரத்தில் இரண்டு ராக்கெட் ஏவுதளங்களை உருவாக்கி விரிவுபடுத்தவுள்ளது.
தற்போது, இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஏற்கனவே 2 ஏவுதளங்கள் உள்ளன.
இந்நிலையில், அங்கு மூன்றாவதாக ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, 30 டன் எடையை தூக்கி செல்லும் ராக்கெட்டுகளை ஏவும் திறன் கொண்ட வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், தமிழக மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை ஏவுவதற்கான ஏவுதளமும் கட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறுகையில், "இந்த ராக்கெட் 2 ஏவுதளங்களும் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இஸ்ரோவின் வளர்ந்து வரும் ஏவுதளத்தின் சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திறன்களையும் மேம்படுத்த உதவும்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |