ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல்: உயிர்சேதம் இல்லை என அறிவிப்பு
ஈராக்கின் வடக்கு பகுதி நகரான இர்பிலில் கட்டப்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்தை நோக்கி நடத்தப்பட்ட அடுத்தடுத்த ஏவுகணை தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஈராக்கின் வடக்கு பகுதி நகரான இர்பிலில் கட்டப்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட அடுத்தடுத்த 12 ஏவுகணைத் தாக்குதலால் பெரும் பதற்றம் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் தாக்குதலில் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படாத நிலையில், இந்த தாக்குதலானது ஈரானிலிருந்து நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Another video of the explosions that occurred in Erbil. pic.twitter.com/hm1dBotKUr
— Mustafa Saadoon (@SaadoonMustafa) March 12, 2022
ஆனால் இந்த தாக்குதல் குறித்து முதலில் பேசிய பாக்தாத்தின் ஈராக் அதிகாரி, நடத்தப்பட்ட இந்த ஏவுகணை தாக்குதலானது அமெரிக்க தூதரகத்தை நோக்கி நடத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு பேசிய குர்திஸ்தானின் வெளிநாட்டு ஊடக அலுவலகத்தின் தலைவர் லாக் கஃபாரி, ஈராக்கின் இர்பில் நகரில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலானது அமெரிக்கா தூதரகத்தை தாக்கவில்லை, ஆனால் கட்டப்பட்டு வரும் அமெரிக்க தூதரகத்தின் சுற்றுசுவரில் தாக்கியுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசிய அமெரிக்கா அதிகாரிகள் இந்த தாக்குதலானது இர்பில் நகரில் கட்டப்பட்டுவரும் அமெரிக்க தூதரகத்தை நோக்கி நடத்தப்பட்டதாக தெரியவில்லை என அமெரிக்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க பாதுகாப்புத்துறை வெளிட்ட அறிக்கையில் ஈராக்கின் இர்பில் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் எத்தனை ஏவுகணை ஏவப்பட்டன என்ற சரியான எண்ணிக்கையும் ஏவுகணை எந்த வகை சேர்ந்தது என்றும் இதுவரை சரியாக தெரியவில்லை என தெரிவித்தார்.
#BREAKING
— Bashar Azeez (@bashargwani) March 12, 2022
The moment of missile attack on US consulate in #Erbil pic.twitter.com/5u7tpsCaWy
அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஈராக்கின் தொலைக்காட்சி நிறுவனமான குர்திஸ்தான்24 சேனலின் கட்டிடங்கள் சேதமடடைந்து, ஸ்டூடியோ தளத்தின் கண்ணாடிகள் நொறுங்கி விழுந்துள்ளது.
சிலதினங்களுக்கு முன்பு சிரியாவின் டமாஸ்கஸ் அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதற்கு ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனத்தை தெரிவித்து பழிவாங்குவதாக உறுதியளித்திருந்த நிலையில் இந்த தாக்குதலானது நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.