நிலாவில் மோதவுள்ள செயற்கைகோள்: வானியலாளர்களின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு!
நிலாவில் மார்ச் 4ம் திகதி சீனாவின் செயற்கைகோள் மோதவுள்ளதாக வானியலாளர்கள் தெரிவித்திருந்த நிலையில் அதை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது.
பூமியின் துணைக்கோளான சந்திரனில் வரும் மார்ச் 04ம் திகதி செயற்கைக்கோள் ஒன்று மோதவுள்ளது.
முதலில் இந்த செயற்கைக்கோளை 7 ஆண்டுகளுக்கு முன்பு வானில் வெடித்த spaceX நிறுவனத்தின் செயற்கைக்கோள் துண்டு என வானியலாளர்கள் கருதிவந்தனர்.
ஆனால் அது தற்போது 2014ம் ஆண்டு சீனாவில் விண்ணில் செலுத்தப்பட்ட chang'e 5T1 என்ற செயற்கைக்கோளின் விசை ஊக்கி(booster) என வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வானியலாளர்களின் அறிவிப்பிற்கு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தங்கள் chang'e 5T1 செயற்கைக்கோளின் ஊக்கியை (booster) பாதுகாப்பு காரணத்திற்காக பூமியின் வளிமண்டலத்தில் இருக்கும் போதே அழித்து விட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் சீனா விண்வெளி தொடர்பான நிலையான நீண்டகால ஒழுங்குமுறையை பின்பற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளது.