லெபனான்-இஸ்ரேல் இடையே வெடித்தது மோதல்! இரு நாடுகள் பரஸ்பர தாக்குதல்: வெளியான பரபரப்பு வீடியோ
லெபனானிலிருந்து இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே பதட்டத்தை அதிகரித்துள்ளது.
சம்பவம் குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், லெபனானிலிருந்து 3 ராக்கெட்டுகள் இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்டது.
இதில், இரண்டு ராக்கெட்டுகள் இஸ்ரேலுக்குள் தாக்கியது, ஒன்று லெபனான் எல்லையை தாண்டி வரவில்லை.
ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து லெபனான் எல்லைக்கு அருகே உள்ள இஸ்ரேலின் Kfar Giladi, Tel-Hai மற்றும் Qiryat Shemona பகுதிகளில் சைரன்கள் ஒலித்தன.
இந்த ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலில் காயங்கள் அல்லது சேதங்கள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை.
Footage of the apparent rocket impact near Kiryat Shmona pic.twitter.com/EHN8Tl4g10
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) August 4, 2021
உடனடியாக லெபனானை நோக்கி பீரங்கி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி கொடுத்தது என இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
RAW FOOTAGE: 3 rockets were just fired from Lebanon toward northern Israel. 2 rockets landed in Israel, and 1 fell inside Lebanon.
— Israel Defense Forces (@IDF) August 4, 2021
In response, our artillery forces fired into Lebanon. pic.twitter.com/Sf3754RqRU
இந்நிலையில், அதன் தலைமை மற்றும் படைத் தளபதி மேஜர் ஜெனரல் Stefano Del Col இரு தரப்பினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் Interim படை தெரிவித்துள்ளது.