முதல் பந்தியிலே டக்அவுட்டான கோலி, சாம்சன்! சிக்ஸர் மழையில் சதமடித்த ரோகித்
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ரோகித் சர்மா சதம் விளாசினார்.
டக் அவுட்
முதலில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணியில் ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார்.
அடுத்து தூபே 1 ரன்னில் வெளியேற, கோலியைப் போலவே சஞ்சு சாம்சனும் முதல் பந்தில் டக் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 22 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது.
@BCCI
அதிரடியில் ரோகித்
அப்போது அதிரடியில் இறங்கிய ரோகித் சர்மா, ஆப்கான் பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டார். சிக்ஸர் மழை பொழிந்த அவர் 64 பந்துகளில் சதம் விளாசினார். இது நான்கு ஆண்டுகளுக்கு பின் அவர் அடிக்கும் டி20 சதம் ஆகும்.
? Milestone Alert ?
— BCCI (@BCCI) January 17, 2024
Most T20I hundreds in Men's cricket! ? ?
Take. A. Bow Rohit Sharma ? ?
Follow the Match ▶️ https://t.co/oJkETwOHlL#TeamIndia | #INDvAFG | @IDFCFIRSTBank pic.twitter.com/J0hALcdhuF
அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரிங்கு சிங் 36 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் இந்திய அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
@BCCI
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 212 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 69 பந்துகளில் 8 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 121 ஓட்டங்கள் விளாசினார்.
ரிங்கு சிங் 39 பந்துகளில் 6 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 69 ஓட்டங்கள் குவித்தார். ஆப்கான் தரப்பில் ஃபரீத் அகமது மாலிக் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
@BCCI
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |