டி20 போட்டியில் விளையாட விராட் கோலி, ரோகித் சர்மா விருப்பம்: குழப்பத்தில் தேர்வு குழு
இந்திய அணி சார்பாக டி20 போட்டிகளில் விளையாட முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் விருப்பம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர்
இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர் ஜனவரி 11ம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது.
ஜனவரி 11, 14 மற்றும் 17ம் திகதிகளில் மொகாலி, சங்கர்பூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இந்த மூன்று டி20 போட்டிகளும் நடைபெற உள்ளது.
இதற்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் தேர்வு குழு இன்று கூடுகிறது.
விராட் கோலி, ரோகித் சர்மா விருப்பம்
இந்நிலையில் நீண்ட காலமாக இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்த முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் தற்போது டி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐ-யிடம் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகு முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் இந்தியாவின் டி20 அணிகளில் இடம்பெறவில்லை.
ரோகித் மற்றும் கோலி இருவரும் டி20 போட்டிகளில் விளையாட விருப்பம் தெரிவித்து இருப்பதால் தேர்வு குழு குழப்பத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |