அவுஸ்திரேலியா மண்ணில் எந்த இந்தியரும் செய்யாத சாதனையை படைத்த ரோஹித் சர்மா
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ODI போட்டியில், ரோஹித் சர்மா 2 சாதனைகளை படைத்துள்ளார்.
Ind vs Aus
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இன்று அடிலெய்ட்டில் நடைபெற்று வரும் 2வது ஒருநாள் போட்டியில், முதலில் துடுப்பாட்டம் ஆடிய இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்களை இழந்து, 264 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இதில், அதிகபட்சமாக ரோஹித் சர்மா(73) மற்றும் கே.எல்.ராகுல்(61) அரைசதம் அடித்தனர்.
ரோஹித் சர்மா சாதனை
இந்த போட்டியில் 73 ஓட்டங்கள் எடுத்ததன் மூலம், அவுஸ்திரேலியா மண்ணில் 1000 ஓட்டங்களுக்கு அதிகமாக எடுத்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவுஸ்திரேலிய மண்ணில் 21 போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா, 1,003 ஓட்டங்கள் எடுத்துள்ளார். 802 ஓட்டங்களுடன் விராட் கோலி, 2வது இடத்தில் உள்ளார்.
மேலும், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் கங்குலியை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
275 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 11,225 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.
18,426 ஓட்டங்களுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலும், 14,181 ஓட்டங்களுடன் விராட் கோலி 2வது இடத்திலும் உள்ளனர்.
மேலும், SENA நாடுகளில் 150 சிக்ஸர்கள் விளாசிய முதல் ஆசிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |