ரோஹித் சர்மா வாங்கிய புதிய Tesla Model Y.., எண் பலகையில் உள்ள சிறப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா, புதிய Tesla Model Y மின்சார காரை வாங்கியுள்ளார்.
மும்பை நகரில் கருப்பு டீ-ஷர்ட் அணிந்து, இந்த புதிய காரை ஒட்டிச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த காரின் முக்கிய சிறப்பு - அதன் Customised எண் பலகை 3015. இது ரோஹித்தின் மகள் பிறந்த திகதி (டிசம்பர் 30), மகன் பிறந்த திகதி (நவம்பர் 15) மற்றும் அவரது ஜெர்ஸி எண் (45) ஆகியவற்றின் இணைப்பாக அமைந்துள்ளது.
அவரது Lamborghini Urus SE போலவே, இந்த டெஸ்லா காரிலும் தனிப்பயன் எண் பலகை உள்ளது. மற்ற எந்த ஒரு தனிப்பயன் மாற்றங்களும் இந்த காரில் காணப்படவில்லை.
Rohit Sharma has bought a new Tesla electric car, and just like his previous car, he has chosen its number based on his children’s birth dates. 🥹❤️
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) October 7, 2025
3015 🤍 pic.twitter.com/TqBAIA4RKq
ரோஹித் சர்மாவின் வாகன தொகுப்பில் Lamborghini Urus SE, BMW M5 (F1 Edition), Mercedes-Benz GLS 400d மற்றும் Toyota Fortuner ஆகிய கார்கள் உள்ளன.
Tesla Model Y காரா இந்தியாவில் இரண்டு பதிப்புகளில் கிடைக்கிறது. Rear Wheel Drive ரூ. 59.89 லட்சம் (ஷோரூம் விலை) மற்றும் Long Range Rear Wheel Drive ரூ.67.89 லட்சம் (ஷோரூம் விலை) ஆகும்.
Tesla Model Y காரில் 15.4-inch touchscreen, wireless connectivity, premium sound system (9 speakers), panoramic glass roof,heated windshield, dual-zone climate control, ADAS உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rohit Sharma Tesla Model Y, Tesla Model Y India 2025, Rohit Sharma car collection, Tesla EV celebrity India, Tesla 3015 number plate, Rohit Sharma luxury cars, Tesla Model Y features