School Fees ரூ.275 கூட கட்ட முடியாதவர்., இன்று T20 WorldCup-ல் இந்திய அணியை வழிநடத்தும் கேப்டன்
வரும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை ரோஹித் சர்மா கேப்டனாக வழிநடத்த உள்ளார்.
இந்நிலையில், அவரது குழந்தைப் பருவ வாழ்க்கையைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவலை இங்கே பார்ப்போம்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது 37வது பிறந்தநாளை நேற்று (ஏப்ரல் 30) கொண்டாடினார்.
Hitman என அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை கேப்டனாக வழிநடத்துகிறார்.
ரோஹித் ஷர்மாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.214 கோடி. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் அணியின் பணக்கார வீரர்களில் ஒருவராக ரோஹித் ஷர்மா மாறியுள்ளார்.
ஆனால், ரோஹித் ஷர்மாவின் சிறுவயது வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்துள்ளது.
ரோஹித் ஷர்மாவின் பாடசாலைக் கட்டணமான 275 ரூபாயை கட்டுவதற்குக்கூட அவரது குடும்பத்தினரிடம் பணம் இல்லை.
ரோஹித் சர்மாவின் சிறுவயது குடும்ப சூழ்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அப்படித்தான் ரோஹித் சர்மா தனது குழந்தைப் பருவத்தை மாமா வீட்டில் கழித்தார்.
கோடைக்கால முகாமின் போது ரோஹித் ஷர்மாவின் திறமையைக் கண்டறிந்த பயிற்சியாளர் தினேஷ் லாட், அவரை வேறு பாடசாலையில் சேர்க்குமாறு அவரது பெற்றோருக்கு அறிவுறுத்தினார்.
ஆனால் தினேஷ் லாட் பரிந்துரைத்த பாடசாலை கட்டணம் 275 ரூபாய். அந்த பள்ளியில் விளையாட்டுக்கான நல்ல சூழல் இருந்தது. ஆனால் ரோஹித் ஷர்மாவின் குடும்பத்தின் நிலைமையோ 275 ரூபாய் கொடுக்கும் அளவுக்கு பணக்காரர்களாக இல்லை.
ஆனால் ரோஹித் சர்மாவின் திறமையை கவனித்த தினேஷ் லாட், அந்த பாடசாலையின் முதல்வரிடம் ரோஹித் சர்மா பற்றி பேசி பாடசாலை கட்டணத்தில் கொஞ்சம் தள்ளுபடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதன்பிறகு, அந்தப் பாடசாலையில் சேர்ந்த ரோஹித் சர்மா, தினேஷ் லாட்டின் வழிகாட்டுதலின்படி கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கினார்.
இதன் மூலம் இன்று இந்தியாவின் வெற்றிகரமான தொடக்க பேட்ஸ்மேன்களில் ஒருவராக ரோஹித் சர்மா மாறியுள்ளார்.
இந்திய அரசு வழங்கும் துரோணாச்சார்யா விருதையும் தினேஷ் லாட் பெற்றுள்ளார்.
வரவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியில், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியனாக வெளிவர வேண்டும் என்பதே கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பம்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி ஜூன் 01 முதல் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கூட்டு ஹோஸ்டிங்கின் கீழ் நடைபெறுகிறது.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல தயாராகிக்கொண்டு இருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Rohit Sharma's Family Couldn't Afford To Pay Rs 275 School Fees, Rohit Sharma childhood, Rohit Sharma history, Hitman Rohit Sharma