அரையிறுதி வெற்றியின்போது உடைந்து அழுத ரோஹித் ஷர்மா! வைரலாகும் வீடியோ
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றபோது, அணித்தலைவர் ரோஹித் ஷர்மா அழுத வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி
கயானாவில் நடந்த டி20 உலகக்கிண்ண அரையிறுதியில் இந்திய அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
இப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 57 ஓட்டங்கள் எடுத்தார்.
No Rohit Sharma Fans will pass away without liking the post ??
— योगी (@Smyogi_) June 27, 2024
Captain leading From Front
50 For Captain Rohit with a SIX#INDvsENG2024 Virat Kohli #RohitSharma #T20WorldCup रोहित शर्मा #INDvENG pic.twitter.com/sXbVd6iatH
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 16.4 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு சுருண்டது. அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
இந்திய அணி வெற்றி பெற்ற பின் வீரர்கள் ஒவ்வொருவரும் உடைமாற்றும் அறைக்கு சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது வெளியே அமர்ந்திருந்த அணித்தலைவர் ரோஹித் ஷர்மா உணர்ச்சிவசப்பட்டு அழுதார். விராட் கோஹ்லியும், சூர்யகுமார் யாதவும் அவரை தட்டிக் கொடுத்துவிட்டு சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |