Rohit Sharma Fitness: ரோஹித் சர்மாவின் டயட் ரகசியம் இதுதான்
ரோஹித் சர்மாவின் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து பார்க்கலாம்.
ரோஹித் சர்மா
இந்திய ரசிகர்களால் 'ஹிட்மேன்' என அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் ரோஹித் சர்மா.
சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர், ஒரு நாள் போட்டிகளில் அதிக இரட்டை சதம், ஐசிசி நடத்தும் அனைத்து வகையான தொடரின் இறுதிப்போட்டிக்கும் அணியை அழைத்து சென்ற ஒரே அணித்தலைவர் என பல்வேறு சாதனைகளை படைத்ததுள்ளார்.
இந்நிலையில், ரோஹித் சர்மா தனது உடல்நிலையை பிட்டாக வைத்து கொள்ள கடைப்பிடிக்கும் உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
25 முட்டைகள்
ஓட்ஸ் மற்றும் பாலை காலை உணவாக எடுத்துக்கொள்கிறார். ஓட்ஸ் பிடிக்காதவர்கள், முதலில் குறைந்த அளவு எடுத்துக்கொண்டு பின்னர் படிப்படியாக அதிகரிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
30 நிமிட சைக்கிள் பயிற்சியுடன் தனது காலை உடற்பயிற்சியை தொடங்குகிறார். காலையில் உடற்பயிற்சியை முடித்த பின்னர் புரோட்டீன் ஷேக் எடுத்துக்கொள்கிறார்.
இதே போல் அதிகாலையில் எழுந்து, இரவு 8 மணிக்கு முன் இரவு உணவை முடித்து, விரைவாக தூங்கும் பழக்கமுடையவர்.
தனது உடலை வலுவாக வைத்துக்கொள்ள டஜன் கணக்கில் முட்டைகளை எடுத்துக்கொள்கிறார். ஒரே நேரத்தில் 25 முட்டைகளை சாப்பிட்டுள்ளாராம்.
வே புரோட்டீன்
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த, குறைந்த கார்ப் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்கிறார். இதன் மூலம், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீக்கப்பட்டு, ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகரிக்கிறது.
பசுவின் பாலில் இருந்து தயிராக்கப்பட்டு, அதிலிருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கப்படும் போது கிடைக்கும் வே புரோட்டீனில், அதிகளவில் புரதச்சத்து உள்ளது. இதிலுள்ள அமினோ அமிலங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சிறந்த ஆக்சிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.
க்ரஞ்சஸ், லெக் ரெய்ஸ், புஷ்அப்ஸ் மற்றும் புல் அப்கள், கோன் ட்ரில்ஸ், லேடர் ட்ரில்ஸ் போன்ற உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார். கடுமையான உடற்பயிற்சிகளுக்கு பின்னர் நீச்சல் பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |