13 ஆண்டுகளுக்கு பின் தோனியின் அரிய சாதனையை சமன் செய்த கேப்டன்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்து ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார்.
பாரிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணி 2011ஆம் ஆண்டில் எம்.எஸ்.தோனி தலைமையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது.
அந்த தொடரை வெல்ல முடியாவிட்டாலும் சமன் செய்ததே பாரிய சாதனையாக அமைந்தது.
அதன் பின்னர் விராட் கோலி தலைமை ஏற்று, இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் விளையாடியது. ஆனால் இருமுறை சமன் செய்ய முடியாமல் போனது.
Reuters
சமன் செய்த ரோகித் சர்மா
இந்த நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ளதால், தோனியின் 13 ஆண்டுகால சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது.
கேப்டவுனில் நடந்த கடைசி டெஸ்டில் தென் ஆப்பிரிக்க அணி 79 ஓட்டங்கள் மட்டுமே வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
அதனை நோக்கி ஆடிய இந்திய அணி 3 விக்கெட்டுக்கு இலக்கை எட்டியது. கேப்டன் ரோகித் சர்மா 22 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 17 ஓட்டங்கள் எடுத்தார்.
AFP
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |