டோனி ரசிகர்களை மிஞ்சும் அளவிற்கு ரோகித் சர்மா ரசிகர் செய்த செயல பாருங்க! வைரலாகும் வீடியோ
பெங்களூரு அணிக்கெதிரான போட்டியில், துடுப்பெடுத்தாட வந்த ரோகித்சர்மாவை ஆர்த்தி எடுத்த ரசிகரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவில் நேற்று ஐபிஎல் தொடர் துவங்கியது. இதில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின, பெங்களூரு அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
பெங்களூரு அணியில் தனி ஒருவனாக, டிவில்லியர்ஸ் போராடி வெற்றியை தேடித்தந்தார்.
Craze ?#Mi #RohitSharma pic.twitter.com/MiGdB2L5iL
— Mumbai Indians TN FC (@MITamilFC) April 9, 2021
இந்நிலையில், இந்த போட்டியில் மும்பை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
அப்போது துவக்க வீரர்களில் ஒருவராக ரோகித்சர்மா களமிறங்கிய போது, மும்பை ரசிகர் ஒருவர் தன்னுடைய வீட்டில் இருக்கும் டிவி முன்பு, ரோகித்சர்மாவை ஆர்த்தி எடுத்தார்.
அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இணையாவசிகள் சிலர் டோனி ரசிகர்களையே மிஞ்சும் அளவிற்கு இது இருக்கிறதே என்று குறிப்பிட்டு வருகின்றனர்.