ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வேண்டும்- சுனில் கவாஸ்கர் யோசனை
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா குறித்து சுனில் கவாஸ்கர் கருத்து
16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது.
அப்போது, இந்த டெஸ்ட் தொடரை குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்தார். அப்போது, இந்திய அணி பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாட வேண்டும்.
அப்போதுதான் வெற்றி கிடைக்கும். 100 ரன்கள் என்று பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினால் சிறப்பாக இருக்கும். இன்னும் ஒரு வாரத்தில் ஐபிஎல் தொடர் நடக்க இருக்கிறது. அப்போது, இந்திய வீரர்கள் இந்த தோல்விகளையெல்லாம் மறந்துவிடக்கூடாது.
உலககோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்தியா சந்திக்க நேரிடும். அதனால், இந்தியா இதிலிருந்தே பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். தற்போது, மீண்டும் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் யோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், தற்போது ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு வேண்டும். அவர், டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு தயாராக வேண்டும். கடைசி சில ஐ.பி.எல். போட்டிகளில் கூட அவர் விளையாட நேரிடும் என்றார்.