வெளியான 5 டி20 போட்டிக்கான அட்டவணை : ரோஹித், கோலிக்கு இடமில்லை!
வெளியான 5 டி20 போட்டிக்கான அட்டவணையில் இந்திய வீரர் ரோஹித், கோலி பெயர் இடம்பெறாததால் ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோம்பர் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் போட்டி நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணை சமீபத்தில் வெளியானது.
அந்த அட்டவணையில் 5 போட்டிகள் சென்னை சேப்பாக்கத்தில் நடக்க உள்ளது. இந்த உலகக்கோப்பை போட்டிக்கு இந்தியாவில் மொத்தம் 10 மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில், அகமதாபாத், சென்னை, பெங்களூரு, தரம்சாலா, டெல்லி, ஹைதராபாத், லக்னோ, கொல்கத்தா, மும்பை, புணே ஆகிய மைதானங்களில் 46 நாட்கள் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.
ரோஹித், கோலிக்கு இடமில்லை
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 டி20 ஓட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கப்போகும் இந்திய அணியின் வீரர்களின் பெயர்களை வெளியிட்டது. அந்த பெயர் பட்டியலில், ரோஹித்சர்மா, விராட் கோலி பெயர்கள் இடம்பெறவில்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் நன்றாக விளையாடிய திலக் வர்மா, ரவி பிஷ்னாய், சஞ்சு சாம்சன், யஷ்யஸ்வி ஜேய்ஸ்வால் ஆகியோருக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், துணை கேப்டனாக சூர்யகுமார் வழி நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |