மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் ரோஹித் சர்மா? லக்னோ போடும் திட்டம்!
ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் தொடர்ந்து இருப்பாரா என்பது குறித்த யூகங்கள் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ரசிகர்கள் இடையே பிரிவு
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் இருந்து பறிக்கப்பட்டு ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கேப்டன்சி மாற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது, அத்துடன் ஹர்திக் கேப்டன்சியை ஒரு பிரிவு ரசிகர்கள் கண்டித்தும் வருகின்றனர்.
இதனால் அணி நிர்வாகம் மற்றும் ஒரு பகுதி ரசிகர்கள் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதை வெளிப்படையாக பார்க்க முடிகிறது.
ரோகித் சர்மாவுக்கு குறி வைக்கும் லக்னோ
அதே சமயம், ரோஹித் ஷர்மா ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஒரு புதிய அணியை தேடக்கூடும் என்ற வதந்திகள் பரவி வருகின்றன.
இந்நிலையில் சமீபத்திய யூடியூப் பேட்டி ஒன்றில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ரோஹித் ஷர்மாவை எடுப்பதற்கான யோசனையை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி கலகலப்பாக கிண்டலுடன் வெளிப்படுத்தியுள்ளது.
Justin Langer's priceless reaction on getting Rohit Sharma in the mega auction.#RohitSharma #MIvsDC#IPL2024pic.twitter.com/C4820AclEm
— Ankit Duhan (@an_kit_duhann) April 9, 2024
அதில், நீங்கள் ரோகித் சர்மாவை ஏலத்தில் எடுப்பீர்களா என்று நெறியாளர் LSG பயிற்சியாளர் லாங்கரிடம் கேட்க, அதற்கு சிரிப்புடன், ரோகித் சர்மாவை நாங்கள் மும்பையில் இருந்து அழைத்து வருகிறோம், சரி நீங்கள் எங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்துவது நல்லது என்று தெரிவித்துள்ளார்.
ரோஹித் சர்மா தானே மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேறுவது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், அதிருப்தியின் முணுமுணுப்பும், லக்னோ அணியின் திறந்த ஆர்வமும் சுவாரசியமான கதைக்களத்தை உருவாக்குகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |